PMLA Judgment: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

Published : Jul 27, 2022, 11:49 AM ISTUpdated : Jul 27, 2022, 12:28 PM IST
PMLA Judgment: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

சுருக்கம்

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான். இது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான். இது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சோதனை செய்வது, உடனடி கைது, ஜாமின் வழங்க கடும் நிபந்தனை, வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே சொத்துக்களை பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை இன்று நீதிமன்றம் உறுதி செய்தது. 

சட்ட விரோத பண மோசடி சட்டம் மற்றும் இதுதொடர்பான கைது, விசாரணை குறித்து 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி ஏஎம். கன்வில்கர் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சட்டத்திற்கு மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். கைது செய்வது, சொத்துக்களை பறிமுதல் செய்வது, கட்டாயப்படுத்தி ஒப்புக் கொள்ளச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று கூறப்பட்டு இருந்தது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

ED: Enforcement: அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்

இதற்கு பதில் அளித்து இருந்த மத்திய அரசு, ஒரு நபர் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்து அல்லது தனிப்பட்ட நபராக குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருந்தால், அவர் குற்றத்தில் தொடர்புடையவர்தான் என்று வாதாடியது. 

''சட்ட விரோத பண பரிமாற்றம் நிதி அமைப்புகளுக்கு மட்டுமின்றி நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதைத் தடுக்க சர்வதேச நாடுகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தடுப்பதற்கும், இதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கை தேவை என்பதை உணர வைத்துள்ளது'' என்று மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை 3,985 வழக்குகளை பதிவு செய்து இருப்பதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

3 முறை போன் செய்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி; மம்தா பானர்ஜியின் பதில் இதுதான்!!

சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களை ஜாமினில் விடுவிக்க இரண்டு நிபந்தனைகள் விதிக்கின்றனர். இவை இரண்டும் கடுமையானதாக இருக்கிறது என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கட்டுப்பாடுகள் சரியானதே என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து இருந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், ''நீதிமன்றம் அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அனைவரும் மரியாதை அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!