அதிர்ச்சி… மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பன்றி காய்ச்சல்… 142 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Published : Jul 26, 2022, 11:50 PM IST
அதிர்ச்சி… மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பன்றி காய்ச்சல்… 142 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சுருக்கம்

மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும்  குரங்கு அம்மை பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 142 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 43 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,886 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்

புனேவில் 23 நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 30 முதல் 35 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 24 ஆம் தேதி மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் ஆணுறை விற்பனை படு ஜோர்! ஏன் தெரியுமா?

இந்த நிலையில் இதுக்குறித்து, மும்பை மாநகராட்சி சுகாதார அதிகாரி மங்கள கோமரே கூறுகையில், பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டியது போல், பன்றிக் காய்ச்சலிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். குரங்கம்மை நோய் தடுப்புக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!