கருமம் கருமம்.. போதைக்காக ஆணுறையை ஊற வைத்து குடிக்கும் இளைஞர்கள்! 12 மணி நேரம் கிசாவா இருக்கலாம்.. பகீர் தகவல்
நாளொன்றுக்கு 3 முதல் 4 ஆணுறை பாக்கெட்டுகள் விற்கப்பட்டநிலையில், தற்றபோது கடைகளில் இருந்து நாள்தோறும் அதிக ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாவதாக தெரியவந்துள்ளது.
ஆணுறைகளை கருத்தடைக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக, மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் போதைக்காக நறுமணம் வீசக்கூடிய ஆணுறைகளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இது எப்படி என்று யோசிக்கிறீர்களா? மாணவர்கள் நறுமணம் வீசக்கூடிய ஆணுறைகளை வாங்கி, அதனை வெந்நீரில் பல மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அதை உட்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரானது 10 முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக 'போதையில்' வைத்திருக்கும் எனவும் தெரிகிறது.
மேற்குவங்க மாநிலம், பிதான்நகர், துர்காபூர் சிட்டி சென்டர், முச்சிபாரா மற்றும் பெனாசிட்டி போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ஆணுறை தேவை அதிகரித்துள்ளது. “முன்பு ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு ஆணுறை பாக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஆனால் இப்போது கடையிலிருந்து தினமும் அதிகளவில் ஆணுறை விற்பனையாவதாக உள்ளூர் மருந்துக்கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு போதை தருவது எது?
இது தொடர்பாக, துர்காபூரில் உள்ள RE கல்லூரி மாதிரிப் பள்ளியின் வேதியியல் ஆசிரியரிடம் நூருல் ஹக் அதிர்ச்சி தகவலை அறித்துள்ளார். “ஆணுறைகளை நீண்ட நேரம் சூடான நீரில் ஊறவைப்பதால் அதிலுள்ள கரிம மூலக்கூறுகள் உடைந்து ஆல்கஹால் கலவைகளை உருவாகின்றன என்றார். இந்த கலவை இளைஞர்களை போதையில் வைக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Embryologist: ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல் முதலில் எங்கு துவங்கியது..வரலாற்று பின்னணி என்ன?
மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும், துர்காபூர் மாவட்ட மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் திமான் மண்டல் தனியார் செய்திக்கு தெரிவித்துள்ள தகவலில், “ஆணுறையில் ஒருவித நறுமண கலவை உள்ளது. அதை தண்ணீரில் கரைப்பதன் மூலம் மது உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.
Constipation Cure: தினமும் மலம் கழிப்பதில் சிரமமா? இவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்..!