மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இடைநீக்கமானோர் யார்?

By Pothy RajFirst Published Jul 26, 2022, 4:47 PM IST
Highlights

மாநிலங்களவையை நடத்தவிடாமல் இடையூறு செய்ததையடுத்து திமுகவின் 6 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 7 எம்.பி.க்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாநிலங்களவையை நடத்தவிடாமல் இடையூறு செய்ததையடுத்து திமுகவின் 6 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 7 எம்.பி.க்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அப்போதிருந்து நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டிவரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையை முடக்கி வருகிறார்கள். 

'மோடிதான் ராஜா': டெல்லியில் கைதுக்குப்பின் ராகுல் காந்தி விமர்சனம்

இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் மனு அளித்தும் அதற்கு அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. 

இ்ந்நிலையில் மாநிலங்களவை  இன்று கூடியதிலிருந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்டடனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பி.க்கள் அவையின் மைப்பகுதிக்கு வந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹர்வன்ஸ் தொடர்ந்து கேட்டுக்கொண்டபோதிலும் யாரும் செல்லவில்லை.

இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை இணைஅமைச்சர் வி. முரளிதரன், 10 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார். இது குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. ஆனால், அவையின் துணைத் தலைவர், 19 எம்.பி.க்களை இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்செய்து உத்தரவி்ட்டார்.

சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7எம்.பிக்கள், திமுகவிலிருந்து 6 எம்.பி.க்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியிலிருந்து 3 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் இருவர், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் எம்.பிக்கள் பெயர்

சுஷ்மிதா தேவ், மவுசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென்,  அபிர் ராஜன் பிஸ்வாஸ், நைதுமால் ஹக்ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள்.

திமுகவிலிருந்து முகமது அப்துல்லா, கனிமொழி, என்விஎன் சோமு, எம்.சண்முகம், எஸ். கல்யாணசுந்தரம், ஆர் கிரிராஜன், என்ஆர் இளங்கோ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

டிஆர்எஸ் கட்சியிலிருந்து பி லிங்கையா யாதவ், ரவிச்சந்திர வடிராஜூ, தாமோதர் ராவ் தேவகொண்டா,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விசிவதாசன், ஏஏ ரஹிம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சந்தோஷ் குமார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கார்கில் வெற்றி நாள்: ராணுவத்தினரின் அசாதாரண வீரத்தின் அடையாளம்: முர்மு புகழாரம்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பேசுகையில் “ சஸ்பெண்ட் செய்யப்பட்ட 19 எம்.பி.க்களும் அவைக்கு மிகுந்த மரியாதைக் குறைவோடு நடந்தனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளியேறலாம்”  எனத் தெரிவித்தார்.

ஆனால், அவர் கூறியபோதிலும் அவையின் மையப்பகுதியிலிருந்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்துவிட்டு, மீண்டும் அவை கூடியபோதிலும் சஸ்பெண்ட் செய்யப்ட்ட எம்.பி.க்கள் அங்கிருந்து செல்லவில்லை. 

click me!