இந்தியாவில் போலீஸ் ஆட்சி நடக்கிறது, இதில் மோடிதான் ராஜா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.
இந்தியாவில் போலீஸ் ஆட்சி நடக்கிறது, இதில் மோடிதான் ராஜா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு
இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ராகுல் காந்தி, எம்.பி.க்கள் சேர்ந்து ஆர்பாட்டம் செய்தனர். அங்கிருந்து ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லவும் திட்டமிட்டனர். ஆனால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ராகுல் காந்தியை போலீஸார் தங்களின் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால், எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை. மற்ற எம்.பி.க்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு பல்வேறு காவல்நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது ராகுல் காந்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்குஅளித்த பேட்டியில் “ இந்தியாவில் போலீஸ் ஆட்சி நடக்கிறது. அதில் மோடிதான் ராஜா. நான் எங்கும் செல்லமாட்டேன். நாங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் செல்கிறோம். ஆனால் எங்களை போலீஸார் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்தார்
கார்கில் வெற்றி நாள்: ராணுவத்தினரின் அசாதாரண வீரத்தின் அடையாளம்: முர்மு புகழாரம்
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் விஜய் சவுக் பகுதியில் தடுக்கப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும்போது தடுத்து போலீஸார் கைது செய்தனர். நாங்கள்தற்போது போலீஸ் வாகனத்தில் இருக்கிறோம். நாங்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்பது பிரதமர், உள்துறை அமைச்சருக்கு மட்டும்தான் தெரியும்” எனத் தெரிவித்தார்