குற்றங்கள் குறைவதற்கு மது வேண்டாம்ப்பா கஞ்சா அடிங்க; பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி பகிரங்க அழைப்பு!!

Published : Jul 26, 2022, 01:41 PM IST
குற்றங்கள் குறைவதற்கு மது வேண்டாம்ப்பா கஞ்சா அடிங்க; பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி  பகிரங்க அழைப்பு!!

சுருக்கம்

குற்றங்களை தடுப்பதற்காக மது அருந்துவதற்கு பதிலாக கஞ்சா பயன்படுத்துங்கள் என்று சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி பகிரங்க அழைப்பு விடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றங்களை தடுப்பதற்காக மது அருந்துவதற்கு பதிலாக கஞ்சா பயன்படுத்துங்கள் என்று சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி பகிரங்க அழைப்பு விடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துவதால் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், கஞ்சா பயன்படுத்தும்போது இந்தக் குற்றங்கள் குறையும் என்று தெரிவித்துள்ளார்.  

இவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் எப்படி இவ்வாறு பேசலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆணுறை விற்பனை படு ஜோர்! ஏன் தெரியுமா?

இதுதொடர்பாக சட்டீஸ்கர் மாநிலத்தில், கவ்ரேலாபெந்த்ரா மார்வாஹி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ''குற்றங்களை தடுப்பதற்காக மது அருந்துவதற்கு பதிலாக கஞ்சா பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து சட்டசபையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன். மது அருந்துபவர்கள்தான் பாலியல், கொலை, வாக்குவாதம் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், கஞ்சா எடுத்துக் கொள்பவர்கள் இதுபோன்ற குற்றங்கள் எங்காவது நடந்து இருக்கிறதா? சொல்லுங்கள் என்று சட்டசபையில் நான் பேசும்போது கேட்டு இருந்தேன்.

மதுவை ரத்து செய்வது குறித்து, ஒரு குழு  அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழு எவ்வாறு அடுத்தகட்டமாக கஞ்சாவுக்கு மாறுவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மக்களுக்கு போதைவஸ்து பொருட்கள் தேவை என்றால், கஞ்சா அவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். இது கொலை, பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு தூண்டாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்று தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் துடிதுடித்து பலி.. 20 பேர் கவலைக்கிடம்..!

போதை தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சாவுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கஞ்சாவுக்கு பயன்படுத்தும் இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் போதைப் பொருளான பாங்க் போதை வஸ்துவுக்கு, இதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!