மத்தியப்பிரதேசம் குவாலியர் நகரைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு மின் கட்டணம் ரூ.3,419 கோடி என வந்தது.இந்த கட்டணத்தைப் பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மத்தியப்பிரதேசம் குவாலியர் நகரைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு மின் கட்டணம் ரூ.3,419 கோடி என வந்தது.இந்த கட்டணத்தைப் பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குவாலியர் நகரில் ஷிவ் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவரின் கணவர் சஞ்சீவ் கண்கானே. இந்நிலையில் கடந்த 20ம் தேதி குப்தாவுக்கு வீட்டு மின் கட்டணம் செலுத்தக் கோரி மின்சார வாரியத்திலிருந்து பில் அனுப்பி வைக்கப்பட்டது.
5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல்நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடி குவிந்தது: அதானி, அம்பானி போட்டி
அந்த மின் கட்டண பில்லை குப்தாவின் மாமனார் எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். அந்த ரசீதில் வீட்டுக்கு மின் கட்டணமாக ரூ.3,419 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்ததும் குப்தாவின் மாமனார் அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதைப் பார்த்த குப்தா அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததையடுத்து, தற்போது நலமுடன் உள்ளார்.
குப்தாவின் கணவர் சஞ்சீவ் கூறுகையில் “ மின் கட்டணம் கோடிக்கணக்கில் வந்துள்ளது குறித்து மின்சார வாரியத்தில் தெரிவித்தோம். இதைப் பார்த்த அதிகாரிகள் ஏதோ தவறு நடந்திருக்கிறது. உண்மையில் ரூ.1300 மட்டுமே செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஆனால் கோடிக்கணக்கில் மின் கட்டணத்தைப் பார்த்ததும் என் தந்தைக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அனுப்பும் முன், இரு முறை பரிசோதித்தபின்புதான் அனுப்புவார்கள். அவ்வாறு பரிசோதித்தும், இந்தத் தவறு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்
மின்வாரியத்தின் பொதுமேலாளர் நிதின் மாங்கலிக் கூறுகையில் “ இது மனிதத்தவறுதான். இவ்வளவு பெரிய தொகையை மின் கட்டணமாக விதித்த அந்த ஊழியர் யாரென்று விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வாடிக்கையாளருக்கும் பில் தொகை திருத்தி வழங்கப்பட்டது. மின் ஊழியர், வாடிக்கையாள் எண்ணை மின் கட்டணத்தில் பதிவிட்டதால் இந்த தவறு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்
மேற்கு வங்கத்தில் ஆணுறை விற்பனை படு ஜோர்! ஏன் தெரியுமா?
மத்திய பிரதேச மின்துறை அமைச்சர் பிரத்யுமான் சிங் தோமர் கூறுகையில் “ கோடிக்கணக்கில் ஒருவருக்கு மின்கட்டணம் வந்ததை அறிந்தேன். அந்தத் தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. அந்த தவறைச் செய்த அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்