நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது - மத்திய அரசு அதிரடி

 
Published : Mar 24, 2017, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
நாடாளுமன்ற அதிகாரத்தில்  உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது - மத்திய அரசு அதிரடி

சுருக்கம்

supreme court should not interfere in parliament issues

எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. அது நாடாளுமன்றத்துக்கே இருக்கும் புனிதமான உரிமையே இதை முடிவு செய்யும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்கு

எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக லோக் பரஹரி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில், முன்னாள் எம்.பி.களில் 80 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவலை குறிப்பிட்டு இருந்தது.

ஜெட்லி பதில்

இது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த விவகாரம் நேற்று முன் தினம் மாநிலங்களையில் வந்தபோது, பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “ முன்னாள் எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை முடிவு செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உரிமை உண்டு’’ எனத் தெரிவித்து இருந்தார்.

கேள்வி

இந்நிலையில், மக்களவையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் நேற்று எழுப்பினார்கள். குறிப்பாக முன்னாள் எம்.பி.கள் 80 சதவீதம் கோடீஸ்வரர்கள் என்ற விசயம் குறித்து கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் ஓய்வூதியத்தை தடுக்கிறோமா?

கேள்விநேரத்துக்கு பின், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகுதா ராய் பேசுகையில், “ உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி தலையிடுகிறது. எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை முடிவு செய்வது நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கும் உரிமை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஏன் ஓய்வூதியம் தருகிறீர்கள் என்று நாங்கள் கேட்வில்லை?. இந்த விசயத்தில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’’ என்றார்.

நீதிமன்றம் தலையிட முடியாது

இதற்கு பதில் அளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் பேசுகையில், “ எம்.பி.களுக்கு ஓய்வூதியமும், சலுகையும் சட்டத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

இதை முடிவு செய்வது, நாடாளுமன்றத்தின் முழுமையாக அதிகாரத்துக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தின் புனிதமான உரிமையை ஒவ்வொரு உறுப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

எம்.பி.களுக்கு சலுகை, ஓய்வூதியம் வழங்குவதை முடிவு செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உரிமை உண்டு, நீதிமன்றம் தலையிட முடியாது'' என்றார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்