
எதிரி நாடுகளிடம் இருந்து எந்தவித அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்
ராணுவ தகவல் தொடர்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு டெல்லியில் தொடங்கியது.
இதில் பங்கேற்ற இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் , எதிரி நாடுகளிடமிருந்து போர் அச்சுறுத்தல் வந்தால், அது பாரம்பரியப் போர் முறையாக இருந்தாலும் சரி அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி அந்தச் சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என தெரிவித்தார்.
இந்தியாவின் முப்படைகளும், எல்லைக்கு அப்பாலிருந்து வரும் போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் விபின் ராவத் தெரிவித்தார்.
முப்படைகளின் ஆயுத மற்றும் தளவாடத் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், படைகளின் திறனை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பம் பெரிதும் எதவும் என்றும் விபின் ராவத் கூறினார்.