
ஆந்திர மாநிலம் கர்னூலில் விமான நிலையம் அமைப்பதற்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலத்தை வழங்க ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்தது.
ஆந்திரா அமைச்சர்
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜு மத்திய விமான போக்கு வரத்துத் துறை அமைச்சரா உள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு விமானத் துறை குறிப் பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.
திருப்பதி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய வாடாவை அடுத்துள்ள கன்னா வரம் விமான நிலையமும் புதுப்பிக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப் பட்டது.
தேர்தல்வாக்குறுதி
இந்நிலையில், ராயலசீமா பகுதியில் உள்ள கர்னூலில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக் குறுதி அளித்திருந்தார். அதன்படி ஓர்வகள்ளு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்காக, 638.83 ஏக்கர் நிலமும் சர்வே செய்யப்பட்டது.
ஏக்கர் விலை
இப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்கப்பட்டு வருகிறது. எனினும் விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.8 லட்சத்துக்கு வழங்க ஆந்திர அரசு முன்வந்தது. ஆனால், அவ்வளவு விலை தர இயலாது என மத்திய அரசு கூறிவிட்டது.
ஒரு ரூபாய்
இதையடுத்து ஆந்திர மாநிலத் தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்து, அரசாணையை பிறப்பித்துள்ளது.
விரைவில் பணி
இதைத்தொடர்ந்து ஓர்வகள்ளு, கன்னமடகலா, புடிசெர்லா ஆகிய கிராமங் களில் உள்ள நிலம் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளது.அதன்பின் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.