கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு மார்ச் 31 கெடு -  வருமான வரித்துறை எச்சரிக்கை

 
Published : Mar 24, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு மார்ச் 31 கெடு -  வருமான வரித்துறை எச்சரிக்கை

சுருக்கம்

March 31 deadline for the black money patukkalkararkal - Income Tax Alert

மத்திய அரசின் ‘பிரதமர் கிரீப் கல்யான் யோஜனா’ திட்டத்தில் கீழ் சட்டவிரோதடெபாசிட்களை தெரிவிக்க, கருப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு மார்ச் 31ந் தேதி கடைசிநாள். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், 135 சதவீதம் அபராதம், தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குப் பின் கருப்புபணம் பதுக்கியவர்கள் மீது வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் பிரதமர் மோடி, கருப்புபணம் பதுக்கியவர்கள் தங்களின் சட்டவிரோதடெபாசிட்களை அரசுக்கு தெரிவித்து தண்டனையில் இருந்து தப்பிக்க ‘பிரதமர்கரீப் கல்யான்’ திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி மார்ச் 31-ந்தேதிக்குள், இந்த திட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பணம் பதுக்கியவர்கள் தங்கள் கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

அந்த காலக்கெடு இன்னும் 6 நாட்களில் முடிவதையடுத்து, வருமான வரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்து முக்கிய நாளேடுகளில்  விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், “ உங்களின் சட்டவிரோத டெபாசிட் குறித்து வருமான வரித்துறைக்கு தெரியும். ‘பிரதமர் கரீப் கல்யாண்’ திட்டத்தில் சட்டவிரோத வருமானத்தை தெரிவித்தால் தண்டனையில் இருந்து தப்புவீர்கள், உங்களைப் பற்றிய விவரமும் வெளியிடப்படாது.

அவ்வாறு இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், பினாமி சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பாளர்களின் பெயர்கள் அமலாக்கப் பிரிவுத்துறை, சி.பி.ஐ.யிடம் தெரிவிக்கப்பட்டு கிரிமினல்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பிரதமர்கரீப் ‘கல்யாண் திட்டத்தின்’ கீழ், கருப்பு பணத்தை தெரிவிக்காமல் இருப்பவர்கள் வரி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக 137 சதவீதம் செலுத்த வேண்டியது இருக்கும்.

பினாமி சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை தயங்கமாட்டோம். மார்ச் 31-ந்தேதிக்குள் ‘பிரதமர் கரீப் கல்யாண்’ திட்டத்தின் கீழ் சட்டவிரோதடெபாசிட்டை தெரிவிப்பவர்கள் 49.9 வரியும், தெரிவிக்காத நபர்களுக்கு வரி மற்றும் அபராதமாக 77.25 சதவீதமும் விதிக்கப்படும். 

அதேசமயம், வருமானவரித் துறையினர் விசாரணை செய்து கண்டுபிடித்தால், அப்போது 83.25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். ரெய்டு நடத்திகருப்புபணத்தை வெளிக்கொண்டு வந்தால், 137.25 சதவீதம் அபராதம், வரி விதிக்கப்படும். பினாமி சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்