மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை...! நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

By Ajmal KhanFirst Published Aug 29, 2022, 2:04 PM IST
Highlights

செப்டம்பர் 1ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் கவுன்சிலிங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீட் கவுன்சிலிங்கிற்கு தடை..?

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க 2.06 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள்  கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து வருகிற 1 ஆம் தேதி முதல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கவுன்சிலிங் தொடங்கவுள்ளது. இந்தநிலையில்  நீட் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு எழுதிய சில மருத்துவர்கள் தங்களது வினாத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் தங்களது மனுவை அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், கலந்தாய்வை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கோரி  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் அமர்வில் முறையிடப்பட்டது. 

தாம்பரம் தனியார் பள்ளியில் பர்தா அணிந்து வந்த பெற்றோருக்கு தடை...! அதிர்ச்சியில் மாணவிகள்... நடந்தது என்ன..?

உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முறையீட்டை ஏற்க மறுத்தனர். மேலும்  நீட் முதுநிலை கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடைபெறட்டும் அதில் நாங்கள் தலையிட போவதில்லை என கூறினார். மேலும் இந்த நேரத்தில் கவுன்சிலிங் விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களை ஆபத்தில் தள்ள விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள் முதுநிலை நீட் கவுன்சிலிங்கை நிறுத்த மறுப்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிங்க...! சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி

 

click me!