செல்லாத ரூபாயை மாற்ற ஏன் டிச.30க்கு பின் வாய்ப்பு வழங்கவில்லை? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சராமரி கேள்வி

 
Published : Mar 21, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
செல்லாத ரூபாயை மாற்ற ஏன் டிச.30க்கு பின் வாய்ப்பு வழங்கவில்லை? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சராமரி கேள்வி

சுருக்கம்

supreme court question to modi

செல்லாத ரூபாய் நோட்டுகளை 2016, டிசம்பர்30ந் தேதிக்கு பின் மாற்ற முடியாதவர்களுக்கு தனியாக சிறப்பு பிரிவு ஏன் உருவாக்க வில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பி உள்ளது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய்களை டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அலைக்கழிப்பு

அந்த காலக்கெடு முடிந்தபின், கையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மக்கள், குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளையில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கேட்கும் ேகள்விகளுக்கு விளக்கம் அளித்து, மாற்றிக்கொள்ளலாம் என அரசு சார்பில் கூறப்பட்டது. 

ஆனால், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களால்ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்ற முடியவில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி ரிசர்வ்வங்கி அனுமதிக்கவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு சுற்றுலா சென்றவர்கள் கூட அலைக்கழிக்கப் பட்டனர். 

விசாரணை

இதை எதிர்த்து சர்த் மிஸ்ரா  என்பவர் உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர், டி.ஒய்.சந்திரசூத், எஸ்.கே. கவுல் அடங்கி அமர்வு முன் நேற்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. 

மோடி வார்த்தை நம்பிக்கை

அப்போது தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர் தலைமையிலான அமர்வ பிறப்பித்த உத்தரவில், “ பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மக்களிடம் உரையாற்றுகையில், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்புகூட சிலர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தின் அடிப்படையில், கையில் செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் மார்ச் 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில்டெபாசிட் செய்யலாம் எனக் கூறியிருந்தார். அந்த வார்த்தை மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

ஏன் உருவாக்கவில்லை?

ஆனால், நீங்கள் வாய்ப்பு வழங்கவில்லை. டிசம்பர் 30-ந் தேதிக்குபின்பும், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களால் கையில் செல்லாத ரூபாய் வைத்து இருக்கும் மக்கள் டெபாசிட் செய்வதற்காக சிறப்பு பிரிவை ஏன் அரசு உருவாக்கவில்லை? அதற்கான காரணங்கள் என்ன?. 

ஏன் உருவாக்கவில்லை?

நவம்பர் 8 முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் வெளிநாடு சென்ற மக்கள், வெளிநாடு இந்தியர்களுக்கு மட்டும் மார்ச் 31-ந் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதித்து ஏன்?. தவிர்க்க முடியாத, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களால், டெபாசிட் செய்ய முடியாத நபர்களுக்கு மட்டும் ஏன் தனிப்பரிவை உருவாக்கவில்லை ? 

இது குறித்து விரிவான பதிலை ஏப்ரல் 11-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!
இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!