27 தேர்தல்களில் தோல்வி - ராகுல் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை....!!

First Published Mar 21, 2017, 3:07 PM IST
Highlights
rahul name recommended for guinness


காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல்காந்தி, பொறுப்பு ஏற்றபின் 27 தேர்தலுக்கும் மேலாக தோல்வி அடைந்ததையடுத்து, அவரின் பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சேர்க்கக் கோரி மத்தியப்பிரதேச மாணவர் ஒருவர் கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். 

காங்.கடின காலம்

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. அதிலும், துணைத்தலைவராக ராகுல்காந்தி பொறுப்பு ஏற்றபின், காங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உருவாகியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. சுறுசுறுப்பான, தெளிவான தலைமை இல்லை என தொண்டர்கள் மத்தியில் குற்றம்சாட்டப்பட்டது. 

27 தோல்வி

இந்நிலையில்,  மத்தியப் பிரதேசம் மாநிலம், ஹோசங்காபாத் பகுதியைச் சேர்ந்த விஷால் தவான் என்ற பொறியியல் மாணவர், தேர்தலில் 27 தோல்விகளுக்கும் மேல் சந்தித்த ராகுல் காந்தியின் பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கட்டணம் தயார்

கடந்த 5 ஆண்டுகளில் ராகுல் காந்தி பொறுப்புக்கு வந்து பிராசரம் செய்தபின், காங்கிரஸ் கட்சி 27 தோல்விகளுக்கும் மேல் சந்தித்துள்ளது.  கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்கு இது ஒன்றே போதும்.

இது தொடர்பாக கடிதத்தை கின்னஸ் அமைப்புக்கு எழுதி இருக்கிறேன்.  கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்த தயார் என்கிறார் விஷால் தவான். 

பதில் இல்லை

அதுமட்டுமல்லாமல், ராகுல்காந்தி பெயரை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்து விஷால் தவான் அனுப்பிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ராகுல்காந்தியின் பெயரை சேர்ப்பது குறித்து கின்னஸ் நிறுவனம் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. 

நகைச்சுவை

ராகுல்காந்தியின் அ ரசியல் அறிவு சிலநேரங்களில் எதிர்க்கட்சியினரால் நகைச்சுவைக்கு ஆளாகி இருக்கிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி தனது கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை திடீரென மறந்துவிட்டார்.

உடனே அகிலேஷிடம் தனது கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை கேட்டு அறிந்து பேசினார் என நாளேடுகளில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

click me!