
இந்தியாவில் பிபிசி சேனலை முழுமையாகத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது.
ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி
இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானா, கேரளா, டெல்லி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் திரையிட்டு பார்த்து வருகிறார்கள். இதனால் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, இந்தியாவில் பிபிசி சேனலை இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யக் கோரி, இந்துசேனா தலைவர் விஷ்ணு குப்தா, விவசாயி பீரேந்திர குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் “ பிபிசி சேனல், இந்தியாவுக்கும், இந்திய அரசுக்கும் எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது. உலகளவில் பிரதமர் மோடி புகழ், இந்தியாவின் புகழ் வளர்ந்ததற்கு எதிராக ஆழ்ந்த சதித்திட்டத்துடன் இந்த பிபிசி சேனல்குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்:அமைச்சர் மாண்டவியா பேச்சைக் கண்டித்து திமுக வெளிநடப்பு
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம், நரேந்திர மோடிக்கு எதிராக, அவரின் மாண்பைக் குலைக்கும் அப்பட்டமான துணிச்சலாக முயற்சியாக மட்டும் இல்லை, இந்துக்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கிலும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
மேலும் பிபிசி ஆவணப்படத்தை தடை செய்யக் கோரியும், மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிபதிகள், சஞ்சீவ் கண்ணா, எம்எம் சுரேந்திரா ஆகியோர் அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில் “ இந்த ரிட் மனு முற்றிலும் தவறாக இருக்கிறது, இந்த மனுவை தொடர்ந்து பரிசீலிக்க முடியாது” எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தனர்.