அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை குறித்த விசாரனை, புலன்விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்க உள்ளது.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை குறித்த விசாரனை, புலன்விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்க உள்ளது.
இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று தாக்கல் செய்தார்.
அதானி நிறுவனத்தில் ரெய்டு! வரிஏய்ப்பு புகாரால் இமாச்சலப் பிரதேச கலால்வரி துறை சோதனை
வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த பொதுநலமனுவில் “ கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்நாளில் கடினமாக உழைத்து சேமித்த பணத்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளார்கள். ஆனால், அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த முதலீடு குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. கோடிக்கணக்கான பணம் வீணாகிப்போனது.
அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு செய்த அறிக்கை வெளியீட்டால் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு மோசமாக வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தனர்.
நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இது குறித்து அதிகாரிகளால் உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இது மக்களின் பணம் என்பதால், மத்திய அரசும், மற்றவர்களும் பதில் அளி்க்க கடமைப்பட்டவர்கள்.அதிக அளவிலான கடன்கள் எவ்வாறு வழங்கப்பட்டது, சரியான ஆய்வுக்குப்பின் வழங்கப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதானி மகன், முகேஷ் அம்பானி மகனுக்கு புதிய பதவி: மகாராஷ்டிரா அரசு உத்தரவு
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வழங்கப்பட்ட கடன்கள் குறித்தது தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பிவி நரசிம்மா, ஜே பர்திவாலா அமர்வில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் திவாரி கூறுகையில் “ இந்த மனுவை அவசர வழக்ககாகக் கருதி விசாரணைக்கு ஏற்க வேண்டும். இதேபோன்ற வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, நாட்டின் தோற்றத்தை அழித்து, பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, செபி ஆகியவற்றை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்த விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் கண்காணிக்க மத்திய அ ரசுக்கு உத்தரவிட வேணடும். ”எனத் தெரிவித்தார்
அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு
இதைக் கேட்ட தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “ இந்த மனுவை நாளை விசாரிக்கிறோம்” எனத் தெரிவித்தார்
கடந்த வாரம் வழக்கறிஞர் எம்எல் ஷர்மா மற்றொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில் “ அமெரி்க்காவைச் சேர்ந்த நாதன் ஆன்டர்சனின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைால், அப்பாவி முதலீட்டாளர்களின் முதலீடு நாசமாகியுள்ளது, அதானி குழுமத்தின் பங்குமதிப்பு செயற்கையாக அழிக்கப்பட்டுள்ளது ”எ னத் தெரிவித்திருந்தார்
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அதானி குழும் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக பதிலும் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்குஅதானி குழுமம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.