NEET PG 2023 Registration: முதுநிலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு இன்று மீண்டும் ஆரம்பம்

By SG BalanFirst Published Feb 9, 2023, 12:09 PM IST
Highlights

இன்டர்ன்ஷிப் நிறைவு செய்வதற்கான அவசாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து NEET PG 2023 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மாலை 3 மணி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆரம்பம் ஆகிறது. natboard.edu.in என்ற இணையதளத்தில் நீட் பிஜி தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு செய்யலாம்.

பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 11.55 வரை இந்த விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இந்த அவகாசத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

Natasha Perianayagam: இந்த 13 வயது சிறுமிதான் உலகிலேயே புத்திசாலி மாணவி! எல்லா டெஸ்டிலும் நம்பர் 1!

இன்டர்ன்ஷிப் முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 27ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பப் பதிவுக்கான வாய்ப்பு திறக்கப்படுகிறது.

வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் முடிப்பவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே தகுதி உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் திருத்தங்கள் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் பிப்ரவரி 18 முதல் 20 வரை மற்றொரு வாய்ப்பும் கொடுக்கப்படும்.

பல் மருத்துவ அறுவைசிகிச்சை படிப்புக்கான விண்ணப்பப் பதிவும் நாளை தொடங்குகிறது. பல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 10 மாலை 3 மணி முதல் பிப்ரவரி 12 இரவு 11.55 வரை சமர்ப்பிக்கலாம்.

இதை எல்லாம் கூடவா திருடுவாங்க! டவர் முதல் தண்டவாளம் வரை... வியக்க வைத்த நூதனத் திருட்டுகள்!

click me!