இதை எல்லாம் கூடவா திருடுவாங்க! டவர் முதல் தண்டவாளம் வரை... வியக்க வைத்த நூதனத் திருட்டுகள்!

By SG BalanFirst Published Feb 9, 2023, 10:23 AM IST
Highlights

எல்லாரையும் ஏமாற்றிவிட்டு, நினைத்துக்கூட பார்க்காத பொருட்களை சாமர்த்தியமாகத் திருடிச்சென்றுள்ளனர் பலே திருடர்கள்.

நம் நாட்டில் நூதனமான திருட்டு வழக்குகளுக்குப் பஞ்சமே கிடையாது. விதவிதமான வழிகளில் திருடர்கள் கைவரிசை காட்டுவதை அறிந்திருப்போம். ஆனால், கண்முன்னாலேயே ஒரு பாலம் காணாமல்போவது, உயர்ந்து நிற்கும் மொபைல் டவர் மாயமாவது என்று நினைத்துப் பார்க்க முடியாத பொருட்கள் திருடுபோன கதையும் அரங்கேறி உள்ளன. இந்தத் திருட்டுகள் பற்றித் தெரிந்துகொள்ளும்போது இதை எல்லாம் கூடவா திருடுவார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.

2 கி.மீ. ரயில் தண்டவாளம்

ரயிலில் திருட்டுபோன சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரயில் தண்டவாளமே களவாடப்பட்ட சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பந்தவூல் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து லோஹாத் சக்கரை ஆலை வரை  ரயில்வே பாதை சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்தப் பாதையில் உள்ள 2 கி.மீ. நீள தண்டவாளம் மாயமாகியுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் புகார் கொடுத்த பின்பு, ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்துடன் காதலர்களுடன் ஓடிப்போன மனைவிகள் - ஷாக்கில் கணவர்கள்

29 அடி உயர மொபைல் டவர்

பீகார் மாநிலம் பாட்னாவில் 2006ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் ஒரு மொபைல் போன் டவர் அமைத்தது. அந்த நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மொபைல் டவரை ஜி.டி.எல் நிறுவனம் பராமரித்து வந்தது. ஒருநாள் டவரைப் பார்க்க வந்த ஜி.டி.எல் நிறுவன ஊழியர்கள் டவர் அங்கு இல்லாததைக் கண்டு உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். உரிமையாளர் ஏற்கெனவே சிலர் வந்து டவரைக் கழற்றிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜி.டி.எல் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்தது. காவல்துறை திருட்டு ஆசாமிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

60 அடி பாலம்

பீகாரில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அமியவார் கிராமத்தில் 60 அடி நீளம் கொண்ட இரும்புப் பாலம் இருந்தது. இந்தப் பாலம் 50 ஆண்டுகள் பழமையானது. இதனை நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு வந்த திருட்டு ஆசாமிகள் 3 நாட்களாக இருந்து பொறுமையாக அபேஸ் செய்து சென்றுவிட்டனர். அதிகாரிகள் என்று ஊர்மக்களையும் நம்ப வைத்ததால் அவர்கள் கண்முன்னாலேயே பாலத்தை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

ஒரு கிலோமீட்டர் சாலை

மத்தியப் பிரதேச மாநிலம் சந்தி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போடப்பட்ட சாலை இரவோடு இரவாகக் காணாமல் போனது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகாரும் அளித்தனர். நேற்றுவரை இருந்த சாலை இன்று காணவில்லை என்று கூறியுள்ளனர்.

AIMPLB:முஸ்லிம் பெண்கள் மசூதியில் தொழுகை நடத்தலாம்: உச்ச நீதிமன்றத்தில் ஏஐஎம்பிஎல்பி பிரமாணப்பத்திரம் தாக்கல்

click me!