AIMPLB:முஸ்லிம் பெண்கள் மசூதியில் தொழுகை நடத்தலாம்: உச்ச நீதிமன்றத்தில் ஏஐஎம்பிஎல்பி பிரமாணப்பத்திரம் தாக்கல்

By Pothy RajFirst Published Feb 9, 2023, 9:48 AM IST
Highlights

முஸ்லிம் பெண்கள் மசூதியில் சென்று தொழுகை நடத்தத் தடையில்லை, அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்(ஏஐஎம்பிஎல்பி) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் மசூதியில் சென்று தொழுகை நடத்தத் தடையில்லை, அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்(ஏஐஎம்பிஎல்பி) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பர்ஹா அன்வர் ஹூசைன் ஷேக் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “ முஸ்லிம்  பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் மசூதிக்குள் நுழைவதற்கோ அல்லதுதொழுகை நடத்துவதற்கோ அனுமதியில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த நடைமுறையை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஊழலற்ற இந்தியா உருவாகிக் கொண்டு இருக்கிறது... மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்!!

இந்த மனு வரும் மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாம்சத் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு அந்த உரிமையும், வசதியும் மசூதிக்குள் செய்து தரப்படுகிறது. விருப்பப்பட்டால் அவர்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தலாம். வழிபாட்டுத் தலங்களில் உள்ள மத நடைமுறைகள் முற்றிலும் தனியார் அமைப்புகள் மசூதிகளின் முத்தவாலிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

முஸ்லிம தனிநபர் சட்டவாரியம் எந்த அரசுஅதிகாரமும் இல்லாத மதகுருமார்கள் அமைப்பாக இருப்பதால், இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே ஆலோசனைக் கருத்தை வெளியிட முடியும்
முஸ்லி்ம் தனிநபர் சட்டவாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம், ஆகியவை இந்த விஷயத்தில் மத நம்பிக்கையாளர்களின் மத நடைமுறைகளுக்கு உட்பட்டு,  தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்படும் ஒரு மத்துக்குள் நுழையவும் முடியாது.

இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?

இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள், மத நூல்கள், கோட்பாடுகள் மற்றும் மத நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு, மசூதிகளுக்குள் தொழுகை நடத்த பெண்கள் நுழைவது அனுமதிக்கப்படுகிறது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் மசூதிக்குள் தொழுகை நடத்த சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது கிடைக்கும் வசதிகளை பெற அவர் தனது உரிமையை பயன்படுத்துவது அவருடைய விருப்பமாகும். இந்த வஷயத்தில் முரண்பாடான எந்தவிதமான மதம்சார்ந்த கருத்துக்களையும் தெரிவிக்கவிரும்பவில்லை

முஸ்லிம் பெண்கள் தினமும் 5 வேளை தொழுகையில் ஈடுபடுவதை இஸ்லாம் கடமையாக்கவில்லை அல்லது பெண்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நமாஸ் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை, அது முஸ்லிம் ஆண்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தில் இஸ்லாத் கோட்பாடுகளின்படி, பெண்கள் மசூதியிலோ அல்லது வீட்டிலோ தனது விருப்பப்படி தொழுகை நடத்த அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறை ! கேரளாவின் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது: வீடியோ

மதீனாவில் உள்ள மசூதியில் கூட பெண்களும், ஆண்களும் தனித்தனியாக தொழுகை நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண்களுக்கு தனியாக தடுப்புகள் வைக்கப்பட்டு அவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இருபாலரும் ஒன்றாக தொழுகை நடத்த அனுமதியில்லை. 

மெக்காவில் உள்ள காபாவைச் சுற்றி தொழுகை நடத்தும்போதுகூட, ஆண்களும், பெண்களும் தனித்தனியே பிரிந்து தொழுகை நடத்த தடுப்புகள் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால், இருபாலர்களும் கலந்து ஒன்றாக தொழுகை நடத்த முஸ்லிம் நெறிமுறையில் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!