சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு... பொன்.மாணிக்கவேலின் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 2, 2023, 5:57 PM IST
Highlights

பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேல், மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இதையும் படிங்க: ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

ஏற்கெனவே இந்த மனு கடந்த நவம்பர் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாணைக்கு தடைவிதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதார் காதர் பாட்ஷாக்கும் உத்தரவிட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்திய தபால் துறையில் அருமையான வேலை.. 8ம் வகுப்பு படித்தால் போதும் - உடனே அப்ளை பண்ணுங்க!

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். அப்போது குறுக்கிட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்த கட்டவிசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

click me!