Supreme Court demonetisation: ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பாரா? பணமதிப்பிழப்பு தீர்ப்பு பற்றி பாஜக கருத்து

By Pothy RajFirst Published Jan 2, 2023, 3:04 PM IST
Highlights

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு  நாட்டின் நலனுக்கான வரலாற்றுத் தீர்ப்பு, பணமதிப்பிழப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு  நாட்டின் நலனுக்கான வரலாற்றுத் தீர்ப்பு, பணமதிப்பிழப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.  இதில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும், நியாயமான காரணங்கள் உள்ளன என்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக் குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். 

அவர் கூறுகையில் “ 2016ம் ஆண்டுமத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதிஅளித்தலுக்கு பெரிய அடியாக அமைந்தது. வருமானவரியை அதிகரித்து, பொருளாதாரத்தை சுத்தம் செய்தது.

நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு முடிவு. தேசிய நலனைக் கருத்தில் கொண்டு  எடுக்கப்பட்ட இந்த முடிவையும் உச்ச நீதிமன்றம் செல்லும் என உறுதி செய்துவிட்டது. பணமதிப்பிழக்குப்பு எதிராகப் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பொதுமன்னிப்புக் கேட்பாரா, வெளிநாட்டில் பேசியதற்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்பாரா.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகரித்துள்ள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கிறது, இந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ள. மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகூட தனது தீர்ப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சிறப்பானது எனத் தெரிவித்துள்ளார்

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்

click me!