2023 Assembly Polls:பாஜகவின் தலைவிதியை மாற்றும் 2023சட்டசபைத் தேர்தல்கள்:2024 மக்களவைத் தேர்தலுக்கு செமிபைனல்

By Pothy RajFirst Published Jan 2, 2023, 1:42 PM IST
Highlights

2023ம்ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத் தேர்தல்கள் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தலைவிதியை மாற்றப்போகும் தேர்தல்களாக இவை பார்க்கப்படுகின்றன.

2023ம்ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத் தேர்தல்கள் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தலைவிதியை மாற்றப்போகும் தேர்தல்களாக இவை பார்க்கப்படுகின்றன.

கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய முக்கிய மாநிலங்களில் இந்த ஆண்டுசட்டசபைத் தேர்தல்கள் நடக்கஉள்ளன. இது தவிர வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து,திரிபுரா, மேகாலயாவிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

இதில் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில்தான் இந்த ஆண்டு முதல்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மாநிலங்களில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். மார்ச் மாதத்தில் இந்த மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். 

திரிபுராவில் பாஜக ஆளும்அரசும், நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேலாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சியில் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்துக்கு ஏப்ரல்கடைசிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. 

224 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் காலம் மேமாதம் முடிகிறது. ஆதலால், ஏப்ரல் கடைசி அல்லது மே முதல்வாரத்துக்குள் இந்த மாநிலத்துக்குள்  தேர்தல் நடத்தி முடிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் தொடக்கத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்றஜனதா தளம் கட்சி ஆட்சியும், பின்னர் கடைசி 4 ஆண்டுகள் பாஜகவும் ஆள்கின்றன. இந்தத் தேர்தல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும். 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

இது தவிர மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானாவின் சட்டசபை பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியில் முடிகிறது. இந்த மாநிலங்கலுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.  

40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டசபைக் காலம் டிசம்பர் 17ம்தேதி முடிகிறது, மத்தியப்பிரதேசத்தின் சட்டசபைக் காலம் 2024, ஜனவரி 6ம் தேதியும், சத்தீஸ்கர் சட்டசபைக் காலம் 2024, ஜனவரி 3ம் தேதியும் முடிகிறது. ராஜஸ்தான் சட்டசபைக் காலம் 2024, ஜனவரி 14ம் தேதியும், தெலங்கானா சட்டசபைக் காலம் 2024, ஜனவரி 16ம் தேதியும் முடிகிறது

இந்த 5 மாநிலங்களுக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தனித்தனியாக நடத்தும்போது தேர்தல் ஆணையத்துக்கு கடும் வேலைப்பளு ஏற்படும் என்பதால், டிசம்பர் மாதத்துக்குள் 5 மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல்நடத்தி முடிக்கப்படும்.

இந்த 5 மாநிலங்களில், சத்தீஸ்கர்,ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜக அல்லாத கட்சி ஆள்கின்றன , மத்தியப்பிரதேசத்தில் முதல் ஓர் ஆண்டு காங்கிரஸ் கட்சியும், பின்னர் பாஜகவும்ஆள்கின்றன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்துக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி வெளியிடப்பட்டுவிட்டது. ஆதலால், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!

2023ம் ஆண்டு நடக்கும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பதற்கான அரையிறுதி ஆட்டமாக, செமி பைனலாக அமையும். 
குறிப்பாக மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சி தொடருமா அல்லது மக்கள் மனதில் வெறுப்பு அலை, போதும் இந்த ஆட்சி என்ற சலிப்பு ஏற்பட்டு காங்கிரஸுக்கு வாய்ப்புக் கதவு திறக்குமா என்பது இந்ததேர்தல் முடிவுகளில் தெரியவரும். 
 

click me!