Demonetisation: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

Published : Jan 02, 2023, 12:00 PM ISTUpdated : Jan 02, 2023, 12:06 PM IST
Demonetisation: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

சுருக்கம்

கடந்த 2016ம் ஆண்டு, ரூ.1,000 ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வில் 5 நீதிபதிகளில் ஒரு நீதிபதியான பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2016ம் ஆண்டு, ரூ.1,000 ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வில் 5 நீதிபதிகளில் ஒரு நீதிபதியான பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

ஆனால், அரசியல்சாசன அமர்வில் இருந்த 4 நீதிபதிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும், ரிசர்வ் வங்கியுடன் நன்கு ஆலோசித்துதான் மத்திய அ ரசு செயல்படுத்தியது என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.  இதில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும், நியாயமான காரணங்கள் உள்ளன என்று தீர்ப்பு அளித்தனர்.

ஆனால், அரசியல்சாசன அமர்வில் இருந்த 5 நீதிபதிகளில் நீதிபதி பி.வி.நாகரத்னா  மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் அளித்த தீர்ப்பில் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு, அங்கு விவாதித்துவிட்டு  நிறைவேற்றி இருக்க வேண்டும். மத்திய அரசு வெறும் அரசாணை மூலம் இதைச் செய்திருக்கக் கூடாது. 

Supreme Court Verdict on Demonetisation: பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி செய்திருக்க வேண்டும். அரசாணை மூலம் அறிவித்திருக்கக் கூடாது. 500, 1000ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ததது களமுள்ள செயல், இது சட்டவிரோதமானது. ரிசர்வ் வங்கி சுதந்திரமான கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை அளிக்க அனுமதிக்காமல்,  கருத்து மட்டுமே கோரப்பட்டது” எனத் தீர்ப்பளித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!