69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு!! உச்சநீதிமன்றம் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 27, 2018, 3:17 PM IST
Highlights

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 
 

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த அன்னபூரணி மற்றும் அகிலா என்ற மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில், தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 69% இட ஒதுதுக்கீட்டால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு சிக்கலாக இருப்பதாகவும் அதனால் 69% இடஒதுக்கீட்டை செல்லாது எனவும் அறிவிக்க கோரியிருந்தனர். 

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இடஒதுக்கீடு என்பது சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு பிறகே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, இதுதொடர்பான கூடுதல் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தடை விதித்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக்கூடாது என்று 1992ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு எதிராக இந்த 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தியதா என்பது குறித்த மூல வழக்கு, வரும் நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் எனக்கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 
 

click me!