
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள கோவில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், ராகுல் காந்தி உண்மையில் ஹிந்துதானா என்று முதலில் நிரூபிக்க வேண்டும் எனவும் சோனியா காந்தி வீட்டில் ஒரு சர்ச்சே இயங்கி வருகிறது எனவும் ராஜ்யசபா எம்.பி சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயனத்தை மேற்கொண்டார்.
அதில் முதல் நாளன்று துவாரகை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபட்டார். அதைதொடர்ந்து சாலை மார்க்கமாக சென்று மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்.
இறுதி நாளான நேற்று சோடிலா நகரில் மக்களிடையே உரையாற்றிவிட்டு மலையுச்சியில் உள்ள சாமூண்டா அம்மன் கோவிலுக்கு சுமார் 1000 படிகள் ஏறிவந்து வழிபட்டார்.
மாலையில் காக்வத் கிராமத்தில் உள்ள கோதால் தாம் கோவிலுக்கு சென்றார். மேலும் வரும் வழியில் உள்ள ஜலாராம் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
பாஜக மற்றும் ஹிந்துத்துவா நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுப்பதே இதன் நோக்கம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி உண்மையில் ஹிந்துதானா என்று முதலில் நிரூபிக்க வேண்டும் எனவும் சோனியா காந்தி வீட்டில் ஒரு சர்ச்சே இயங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.