"ரூபாய் நோட்டு விவகாரம் சு.சாமிக்கே பொறுக்க முடியல..." மத்திய அரசை வறுத்து எடுத்த சாமி...

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
"ரூபாய் நோட்டு விவகாரம் சு.சாமிக்கே பொறுக்க முடியல..."   மத்திய அரசை வறுத்து எடுத்த சாமி...

சுருக்கம்

பிரதமர் மோடியின் ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாத அறிவிப்பால் மக்கள் அனுபவித்து வரும் பல சிரமங்கள் குறித்து அறிந்த பாரதிய ஜனதா எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி, டுவிட்டரில் மத்திய அரசை வறுத்து எடுத்துவிட்டார். 

செல்லாத அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி, கடந்த 8-ந்ததேதி புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கொடுத்து மாற்றுவதற்கு மத்திய அரசு நாளுக்கு நாள் புதிய விதிமுறைகளை புகுத்தி வருகிறது.  

55 பேர் பலி

வரிசையில் நின்று மக்கள் பணம் பெறும்போது, சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். மோடியின் அறிவிப்புக்கு இதுவரை நேரடியாகவும், அல்லது மறைமுகமாகவும்  55 பேர் பலியாகி உள்ளனர். 

மத்திய அரசின் முன் எச்சரிக்கை இல்லாத நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்களும், தர்ணாக்களும் நடந்து வருகின்றன. 

சாமிக்கே ஆத்திரம்

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யும் பிரதமருக்கு சிறந்த நண்பருமான, சுப்பிரமணிய சாமிக்கே மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியை வரவழைத்துள்ளது.  

ஹாங்காங் சென்றுள்ள சுப்பிரமணிய சாமி, ‘திஸ் வீக் இன் ஆசியா’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியதாவது-

திட்டமிடல் இல்லை
  நாட்டில் கள்ளநோட்டுக்கள், கருப்பு பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பாரதிய ஜனதா அரசின் தேர்தல்வாக்குறுதியாகும். அதன்படி, இப்போது பிரதமர் மோடி செயல்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால்,மிகப்பெரிய நடவடிக்கைகை மேற்கொள்ளும் முன், போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை, திட்டமிடல் இல்லை, திட்டத்தை செயல்படுத்துவதிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. 

நாட்டில் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துவிட்டார் என்ற அறிவிப்பை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனென்றால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியமைச்சகம் என்ன முன்னேற்பாடுகளை எடுத்தது, என்பது குறித்து தெரியவில்லை. 

2½ ஆண்டுகளா என்ன செய்தார்கள்?

கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இதுபோன்ற ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து இருந்தால், ஆட்சியில் பதவி ஏற்ற நாளில் இருந்து இதற்காக சரியாக, நுனுக்கமாக திட்டமிட்டு இருக்க வேண்டும். 

நிதியமைச்சகம் அனைத்தையும் சரியாகச் செய்துள்ளது, தவறு ஏதும் புரியவில்லை. திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறது என்று வாதத்துக்கு வேண்டுமானால் கூறிவிடலாம். ஆனால், நிதியமைச்சகம் முழுமையான திட்டமிடல் இல்லாமல் களத்தில் இறங்கிவிட்டது என்றுதான் சொல்வேன்.

ரகசியம்

இந்த ரூபாய் நோட்டு தடை செய்யும் திட்டம் பிரதமர் மோடிக்கு மட்டும்தான் தெரியும். கட்சிக்குள் அல்லது அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தால், ரகசியம் கசிந்து, திட்டத்தின் தன்மை செயல் இழந்துவிடும் என தெரிவிக்கவில்லை. 

வசதி செய்யுங்கள்

மக்கள் நீண்ட வரிசையில் பணம் பெற காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு, வங்கிகளில், தபால் நிலையங்களில் மட்டும்  பணம் வழங்கினால் போதாது, சிறப்பு முகாம்களை ஆங்காங்கே நடத்தி, செல்லாத ரூபாய்களை பெற்று பணம் வழங்க வேண்டும். முதியோர்களுக்கு சிறப்பு கவுன்ட்டர்களை திறந்து பணம் வழங்க வேண்டும். இது போன்ற திட்டங்கள் ஏதும் இல்லை. 

காங்கிரஸ் மீது பாய்ச்சல்

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பாகிஸ்தான் தனது கரன்சிகளை அடிக்க எங்கு பேப்பர் வாங்குகிறதோ, அதே நிறுவனத்திடமே இந்திய அரசும் பேப்பர்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், தீவிரவாதிகளுக்கும், கள்ள ரூபாய் நோட்டுக்களை அடிப்பதற்கும் எந்த வித சிக்கல் இன்றி, செலவின்றி காங்கிரஸ் அரசு, பாகிஸ்தானுக்கு உதவி செய்து இருக்கிறது. ஆனால், இன்னும் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை'' என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!