இந்தோனேசியாவில் நடக்கும் 17வது ஜி20 நாடுகள் உச்ச மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்களுடன் ஆலோசிப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் நடக்கும் 17வது ஜி20 நாடுகள் உச்ச மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்களுடன் ஆலோசிப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் 14, 15 மற்றும் 16ம்(இன்று, நாளை, நாளை மறுநாள்) தேதிகளில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார். அங்கு புறப்படும் முன்பாக பிரதமர்ம மோடி தனது பயணத்தின் சாரம்சம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?
இந்தோனேசியா நாடு சார்பில் 14ம் தேதி முதல் 17ம் தேதிவரை நடத்தப்படும் 17-வது ஜி20 நாடுகள் உச்ச மாநாட்டில் பங்கேற்க நான் பாலி நகருக்குச் செல்கிறேன்.
இந்த உச்சி மாநாட்டின்போது, உலக நாடுகளின் கவலையான, பொருளாதார வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினை, சுகாதாரச்சிக்கல்கள், டிஜிட்டல் மாற்றம் ஆகியவை குறித்து உலகத் தலைவர்களுடன் ஆலோசிப்பேன்.
ஜி20 மாநாடு லோகோவில் 'தாமரை'ச் சின்னம்!விளாசும் காங்கிரஸ் :பாஜக பதிலடி
இந்த மாநாட்டின் இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளேன், இந்தியாவுக்கும் அந்த நாடுளுக்கும் இடையிலான நட்புறவை வளர்க்க இது உதவும். நவம்பர் 15ம் தேதி பாலி நகரில் உள்ள இந்திய மக்களிடமும் உரையாற்ற இருக்கிறேன்.
இந்த முக்கியமான தருணத்தில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அடுத்த ஆண்டு ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் வழங்க உள்ளார். ஜி20 தலைமைப் பொறுப்பே டிசம்பர் 1ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் தலைவர்களை தனிப்பட்ட முறையில் இந்த உச்ச மாநாட்டின் போது அழைப்பு விடுக்க இருக்கிறேன்.
ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?
இந்த ஜி20 உச்ச மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகள், உலகச் சவால்களை சமாளிக்க இந்தியாவின் கடப்பாடு ஆகியவற்றை எடுத்துக் கூறுவேன். இந்தியாவின் ஜி20 தலைமை என்பது, வாசுதேவ குடும்பம் என்ற கருத்துருவில் அதாவது, ஒரு பூமி, ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அனைவருக்கும் சமமான வளர்ச்சி, அனைவருக்கும் பகிர்ந்த எதிர்காலம் என்ற தலைப்பில் இருக்கும்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்