இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 17, 2020, 9:22 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு பணிகளும் சிகிச்சை பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் உட்பட அனைத்து மாநிலங்களிலுமே பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, கொரோனா கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகின்றன.

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் 4 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. 3000க்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கூட்ட நெரிசல் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமாக இருக்கும், உழைக்கும் மக்களின் ஏரியாவான தாராவிக்குல் கொரோனா புகுந்தது, மகாராஷ்டிரா அரசுக்கு கடும் சவாலாக உள்ளது. 

அதேபோல டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை எட்டிவிட்ட நிலையில், மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 3205

டெல்லி - 1640

ராஜஸ்தான் - 1169

தமிழ்நாடு - 1323

மத்திய பிரதேசம் - 1308

உத்தர பிரதேசம் - 846

குஜராத் - 1099

தெலுங்கானா - 647

ஆந்திரா - 572

கேரளா - 395

ஜம்மு காஷ்மீர் - 314

கர்நாடகா - 353

மேற்கு வங்கம் - 255

ஹரியானா - 214

பஞ்சாப் - 186

பீஹார் - 83

ஒடிசா - 60

உத்தரகண்ட் - 40

சத்தீஸ்கர் - 36

ஹிமாச்சல பிரதேசம் - 35

அசாம் - 35

ஜார்கண்ட் - 29

சண்டிகர் - 21

லடாக் - 18

அந்தமான் நிகோபார் - 11

மேகாலயா - 9

புதுச்சேரி, கோவா - 7

மணிப்பூர், திரிபுரா - 2.
 

click me!