கடந்த 6 நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர்வு... சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 17, 2020, 5:22 PM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,749 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், இது தெடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,749 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

கடந்த 6 நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம், தேசிய சராரியைவிட 19 மாநிலங்களில் குறைவாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட குணமடைந்தவர்களே அதிகம் என்ற ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவாக 3205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 1640 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 15ஆக உள்ளது.

click me!