
ஏப்ரல் முதல் தேதி முதல் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் எனஸ்ேடட் பாங்க் ஆப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
மெட்ரோ நகரங்களில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகையாக ரூ.5 ஆயிரம் வைத்து இருக்க வேண்டும்.
நகரப்புறங்களில் உள்ள வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.2 ஆயிரமும், சிறிய நகரங்களில் இருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ. ஆயிரம் வைத்து இருக்க வேண்டும்.
ஏப்ரல் முதல் தேதி முதல் இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கும், கணக்கில் அப்போது இருக்கும் தொகைக்கும் இடையிலான வேறுபாட்டை வைத்து அபராதம் வசூலிக்கப்படும்.
மெட்ரோ நகர வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கில் இருக்கும் பணம் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் காட்டிலும் 75 சதவீதம் குறைந்திருந்தால், ரூ.100, மற்றும் சேவை வரி சேர்த்து அபராதம் விதிக்கப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 சதவீதம் முதல் 75 சதவீதம் குறைந்திருந்தால் ரூ.75, சேவை வரி சேர்த்து அபராதம் வசூலிக்கப்படும், 50 சதவீதத்துக்கு குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் ரூ. 20 முதல் 50 வரை கூடுதலாக சேவைவரி சேர்த்து அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும், மாதத்தில் 3 முறைக்கு மேல் ரொக்கப்பரிமாற்றம் செய்தால் அதற்கு ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.