மோடி திட்டம் வேலை செய்யுதா? ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பாம்…

First Published Mar 3, 2017, 7:50 PM IST
Highlights
Modis plan is working? Rs 70 lakh crore black money innovation


வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி கருப்புபணத்தை கண்டுபிடித்துள்ளது என அந்த விசாரணைக்குழுவின் துணைத்தலைவரும், நீதிபதியுமான அர்ஜித் பசாயத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை 2015 மே மாதம் 27–ந் தேதி முதன்முதலாக கூடியது. அதில் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், அது தொடர்பான வழக்குகளில் புலனாய்வு செய்யவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டது.

ஆலோசனை

இந்த குழு நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இதுவரை 5 அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ஒடிசாமாநிலம், கட்டாக்கில், மாநில போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று  சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத் தலைவரும் நீதிபதியுமான அர்ஜித் பசாயத் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

ரூ. 70 ஆயிரம் கோடி

 கருப்பு பணத்தை கண்டுபிடிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தபின், இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி கருப்புபணத்தை கண்டுபிடித்துள்ளோம்.

இதில் மத்திய அரசின் பல்வேறு கருப்பு பண ஒழிப்பு திட்டங்கள் வாயிலாக,  வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.16 ஆயிரம் கோடி பணமும் அடங்கும்.

பரிந்துரைகள்

நாங்கள் கடந்த இரு ஆண்டுகளாக கருப்பு பணத்தை தடுக்க பல்ரேறுபரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறோம். அதில் பெரும்பாலான பரிந்துரைகளை மத்தியஅரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதில் கருப்புபணத்தை கட்டுப்படுத்தும் சில பரிந்துரைகளை அரசு தீவிரமாக பரிசீலணை செய்து வருகிறது.

ரூ.15 லட்சம்

குறிப்பாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்யக்கூடாது என்று பரிந்துரை செய்து இருந்தோம். அதை பட்ஜெட்டில் மத்தியஅரசுஅறிவித்து ஏப்ரல் முதல்தேதி முதல் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

அதேபோல், தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் கையிருப்பாக வைத்திருக்கக் கூடாது என்ற பரிந்துரையையும் அரசு தீவிரமாக பரிசீலணை செய்து வருகிறது.

ஏப்பரில் அறிக்கை

கருப்புபணம் தொடர்பான எங்கள் புலனாய்வு குழுவின் 6-வது இடைக்கால அறிக்கையை, ஏப்ரல் முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

click me!