Hindu Muslim Marriage : இந்தியாவில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே நடக்கும் திருமணம், தற்பொழுது முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம், 1954-ன் கீழ் மதங்களுக்கு இடையேயான திருமணத்தைப் பதிவு செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை நிராகரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், இந்துப் பெண்ணுடன், முஸ்லிம் ஆணுக்கு இடையேயான திருமணம், முகமதிய சட்டத்தின்படி செல்லுபடியாகும் திருமணம் அல்ல என்று கூறியுள்ளது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, முஸ்லிம் ஆணுக்கும், இந்துப் பெண்ணுக்கும் இடையிலான அந்த திருமணம், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்தாலும், முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் ஒழுங்கற்ற திருமணமாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டார். இதனையடுத்து முஸ்லிம் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loksabha Elections 2024 நாடு முழுவதும் ஓய்ந்த பிரசாரம்: நாளை மறுதினம் இறுதிகட்ட வாக்குப்பதிவு!
“முகமதியச் சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆணுக்கு, உருவ வழிபாடு அல்லது நெருப்பை வழிபடும் பெண்ணுடன் திருமணம் செய்வது செல்லுபடியாகாது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் திருமணம் செல்லுபடியாகும் திருமணமாக இருக்காது மேலும் அது ஒழுங்கற்ற திருமணமாக இருக்கும் என்று நீதிமன்றம் தனது மே 27ம் தேதி உத்தரவில் கூறியது.
அந்த இந்து பெண் மற்றும் முஸ்லிம் ஆண் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவருக்குமிடையிலான உறவை பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்ததாலும், கலப்பு திருமணம் நடந்தால் சமூகத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று அச்சம் எழுப்பினர். மேலும் அந்த பெண், திருமணம் செய்து கொள்வதற்கு முன் தனது வீட்டில் இருந்து நகைகளை எடுத்து சென்றதாகவும் குடும்பத்தினர் கூறினர்.
இருப்பினும், இருவரும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். திருமணத்திற்காக பெண்ணோ அல்லது ஆணோ வேறு மதத்திற்கு மாற விரும்பவில்லை என்று அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பெண் தொடர்ந்து இந்து மதத்தைப் பின்பற்றுவார், அதே நேரத்தில் ஆண் அவர்களின் திருமணத்திற்குப் பிறகும் இஸ்லாத்தைப் பின்பற்றுவார் என்று அவர்களின் தரப்பு கூற்றுகள் கூறுகிறது.
திருமணத்தை பதிவு செய்ய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமண அதிகாரி முன் ஆஜராகி, தம்பதியருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். தனிப்பட்ட சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்தாலும், மதங்களுக்கு இடையேயான சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தினார். சிறப்பு திருமணச் சட்டம் தனிநபர் சட்டத்தை மீறும் என்று அவர் எடுத்துரைத்தார்.
ஆனால் "சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வது, தனிப்பட்ட சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது. சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 4, கட்சிகள் தடைசெய்யப்பட்ட உறவில் இல்லாவிட்டால், திருமணத்தை மட்டுமே செய்ய முடியும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலும், பெண்ணும் (இந்து நபர்) பையனின் மதத்திற்கு (இஸ்லாம்) மதம் மாறவும் தயாராக இல்லை என்று குறிப்பிட்டு, தம்பதியினரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!