திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கென ஸ்பெஷல் லட்டு பிரசாதம்..? தேவஸ்தானம் விளக்கம்..

By Thanalakshmi VFirst Published Sep 12, 2022, 4:49 PM IST
Highlights

சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அதிகாரி தர்மா ரெட்டி பதிலளித்தார். இதனைதொடர்ந்து திருப்பதில் சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பரவியது. 
 

திருப்பதி திருமலையில் அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி(பொறுப்பு) தர்மா ரெட்டி தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் ஒருவர் பேசும்போது, திருப்பதி லட்டு பிரசாதத்தில் சர்க்கரை அளவு சற்று அதிகமாக இருப்பதாவும் என்னை போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ணும் வகையில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க:அம்மாடி !! திருப்பதில் ஒரு மாதத்தில் 140 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை.. 22 லட்சம் பேர் தரிசனம்..

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அதிகாரி தர்மா ரெட்டி பதிலளித்தார். இதனைதொடர்ந்து திருப்பதில் சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பரவியது. 

இந்நிலையில் தற்போது இந்த தகவல் தவறானது எனவும் இதுதொடர்பாக பரப்பப்படும் செய்திகள் அனைத்து வதந்தி எனவும் திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. மேலும் திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:திருச்சானூர் பத்மாவதி கோவிலுக்கு தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்.. எவ்வளவு மதிப்பு தெரியுமா.?

மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
 

click me!