ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், அனைவரும் அகவிலைப்படி உயர்வு குறித்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
மேலும் படிக்க:narendra modi:உலக சராசரியைவிட இந்தியாவின் பால் உற்பத்தி 3 மடங்கு உயர்வு: பிரதமர் மோடி பெருமிதம்
இதன்மூலம் இதுவரை 34% பெற்றிருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இனி 38% ஆக உயரவுள்ளது. ஆனால் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
எனவே விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூலை 1 ஆம் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதனால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
மேலும் படிக்க:gyanvapi masjid case: கியான்வாபி மசூதி: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு உகந்தது: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு
அகவிலைப்படி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் ஊதியத்துடன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாத அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.