Weather Report: குமரி கடல் பகுதியில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By Velmurugan s  |  First Published May 20, 2024, 11:38 AM IST

தெற்கு அந்தமான் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு வங்கக் கடல், குமரி கடல், நிகோபார் தீவுகள், தெற்கு அந்தமான், மாலத்தீவு கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடல் பகுதியில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் பலம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்தது. 

Latest Videos

undefined

மேக மூட்டமும் அதிக அளவில் இருக்கின்றன. கடல் மட்டத்திற்கு மேல் தென்மேற்கு திசை காற்று 4.5 கி.மீ. உயரத்திற்கு வீசுகிறது. இந்த காரணிகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது மாலத்தீவுகள், குமரி கடல், தெற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றைய தினம் தென் மேற்கு பருவமழை தொடங்கிவுள்ளது.

காஞ்சியில் குலதெய்வ கோவிலுக்கு சீர் வரிசை எடுத்து வந்து நடிகை ரோஜா மனம் உருகி வழிபாடு

தென் மேற்கு பருவமழை வரும் 31 ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் 36 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி தற்போது பருவமழை தொடங்கிவிட்டது.

தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு நாளைக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழை இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த பருவமழை பெய்யும்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று ஜூன் மாதத்தில் கேரளாவுக்கு மழையாக வரும். இது செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இது முடிந்தவுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்கு பருவழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளையே தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 36 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!