இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி: கார்கே அதிர் ரஞ்சன் சவுத்ரி இடையே வலுக்கும் மோதல்!

By Manikanda Prabu  |  First Published May 20, 2024, 10:30 AM IST

இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி இடம் பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அதிர் ரஞ்சன் சவுத்ரி இடையே மோதல் வலுத்து வருகிறது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முன்னதாக 28 கட்சிகள் இருந்தன. ஆனால், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி திடீரென பாஜக கூட்டணியில் ஐக்கியமானது.

அதேபோல், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்  மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். அதேசமயம், இந்தியா கூட்டணியில் தாம் இருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு ஆதரவளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

இதனிடையே, இந்தியா கூட்டணிஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு தரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தாவை நம்ப முடியாது. அவர் தேர்தல் முடிந்ததும் பாஜக பக்கம் சாய்ந்து விடுவார் என்று கூறினார்.

5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... எத்தனை தொகுதி.? நட்சத்திர வேட்பாளர்கள் யார் தெரியுமா.?

அதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இந்தியா கூட்டணியில்தான் மம்தா இருக்கிறார். யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் அதிர் ரஞ்சனுக்கு கிடையாது. நானும், காங்கிரஸ் மேலிடமும்தான் அதை முடிவு செய்வோம். இதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.” என்று காட்டமாக தெரிவித்தார்.

அதன்பின்னர் அதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த பேட்டியில், என்னையும், மேற்கு வங்கத்தில் காங்கிரசையும் அழிக்க நினைக்கும் மம்தா பானர்ஜியை ஆதரிக்க முடியாது என்றார். இதனிடையே, கொல்கத்தாவில் மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த பேனர், போஸ்டர்களில் இருந்த மல்லிகார்ஜுன கார்கேவின் போட்டோ மீது மர்ம நபர்கள் சிலர் மை பூசினர். மேலும், கார்கே படத்துக்கு அருகே திரிணாமூல் ஆதரவாளர் என்று பேனாவால் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!