Congress session ராய்பூர் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு| சோனியா, ராகுல் செயற்குழுவில் பங்கேற்கவில்லை

By Pothy Raj  |  First Published Feb 24, 2023, 11:04 AM IST

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இன்று தொடங்கும் காங்கிரஸ் கட்சியின் 85வது 3 நாள் தேசிய மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் செயற்குழுவில் பங்கேற்மாட்டார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன


சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இன்று தொடங்கும் காங்கிரஸ் கட்சியின் 85வது 3 நாள் தேசிய மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் செயற்குழுவில் பங்கேற்மாட்டார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றபின் நடக்கும் முதல் தேசிய மாநாடு மற்றும் செயற்குழுக் கூட்டம் இதுவாகும். இதில் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக செயல்பட வேண்டும், அவரின் முடிவில் எந்தவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதால் சோனியா, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைதான சில மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி இந்த தேசிய மாநாட்டில் பங்கேற்றிருந்தால், அதில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், சோனியா, ராகுல் சம்மதத்துடன் எடுக்கப்படும் சூழல் ஏற்படும். அவர்களை கலந்தாய்வு செய்யவும், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தவறமாட்டார். அது கார்கே தலைமைக்கும், சோனியா, ராகுலுக்கும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும். 

கார்கே பொம்மைத் தலைவராகவே இருக்கிறார், முடிவுகளை சோனியா, ராகுல் காந்திதான் எடுக்கிறார்கள் என ஊடகங்களிலும் செய்தி வெளியாகும் என்பதால், எந்தவிதத்திலும் தேசிய மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என முடிவு செய்து சோனியா , ராகுல் பங்கேற்கவில்லை.

இந்த தேசிய மாநாட்டில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும். அது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் தரப்பில் எவ்வாறு கூட்டணிகளை உருவாக்குவது, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும் இந்த மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்படலாம்.

காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது| விமானநிலையத்தில் டெல்லி போலீஸார் நடவடிக்கை

காங்கிரஸ் செயற்குழுக் தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கவும், அவரின் தேர்வில் புதிய உறுப்பினர்கள் நியமனமும் இருக்கவே, சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை. 

இந்த தேசிய மாநாட்டில் நாடுமுழுவதிலும் இருந்து 15 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. முதல்நாளான இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவதா அல்லது இல்லையா என்பது குறித்து பேசப்படும்.

அதன்பின் மாலை 4 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் குறித்து பேசப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் குறித்து நாளை நடக்கும் 2வது நாள் கூட்டத்தில் விவாதிக்கபப்டும். 

1-ஆம் வகுப்பில் 6 வயது முடிந்த குழந்தைகளையே சேர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

2வது நாள் கூட்டத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 3வது நாள் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை உரையாற்றுவார், அதைத் தொடர்ந்து ராய்பூரில் காங்கிரஸ் பேரணி நடந்து முடிவு பெறும். 

காங்கிரஸ் கட்சியின் தேசியமாநாடு முதல்முறையாக டெல்லிக்கு வெளியே இப்போதுதான் நடக்கிறது. கடந்த 2005ல் ஹைதராபாத்தில் நடந்தது.


 

click me!