மோடியின் ஆட்சியில் வாழ தயாராக இருப்பதாகவும் மோடி ஒரு சிறந்த மனிதர் என்றும் பாகிஸ்தானியர் ஒருவர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மோடியின் ஆட்சியில் வாழ தயாராக இருப்பதாகவும் மோடி ஒரு சிறந்த மனிதர் என்றும் பாகிஸ்தானியர் ஒருவர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மேலும் போதுமான வரத்தும் இல்லை என கூறப்படுகிறது. பெட்ரோல்-டீசல் விலை லிட்டர் சுமார் 300 ரூபாயை கடந்து செல்கிறது. மின்சாரத்தை மிச்சப்படுத்த பல இடங்களில் மாலையில் சந்தைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாகிஸ்தான் அரசு மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் சனா அம்ஜத் என்பவர் நாட்டில் நிலவும் நிலை குறித்து சக பாகிஸ்தானியர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நாடு பிளவுபடாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இன்று மக்கள் வாங்கும் அதே விலையில் மாவு, முட்டை, எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றை வாங்கியிருக்கலாம் என்று சில நேரங்களில் நான் நினைக்கிறேன். நான் என் குழந்தைகளுக்கு உணவளித்திருக்க முடியும்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது| விமானநிலையத்தில் டெல்லி போலீஸார் நடவடிக்கை
நாடு பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று தக்காளியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் என்ற விலையில் வாங்கியிருக்க முடியும். ஆனால் எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது. மோடி மிகச் சிறந்தவர், அவரது மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள். பின்பற்றுகிறார்கள். மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் அல்லது மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் (பர்வேஸ்) முஷாரப் ஆகியோர் வேண்டாம். எங்களுக்கு பிரதமர் மோடி மட்டுமே போதும். ஏனெனில் அவர் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அவர் நாட்டை எங்கு கொண்டு சென்றிருக்கிறார் என்று பாருங்கள்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைதான சில மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
மோடியின் ஆட்சியின் கீழ் வாழ நான் தயார். மோடி ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி மற்றும் கோழிக்கறி நியாயமான விலையில் கிடைக்கிறது. இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாதபோது, நாம் எங்கே வாழ்கிறோம் என்று நீங்கள் நினைப்பீர்கள். நம் நாட்டை 8 ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை சரி செய்ய மோடியை அல்லாஹ் நமக்கு தந்தருள என் மனதார வேண்டிக்கொள்கிறேன். ஒரு காலத்தில் இந்தியாவோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தோம். இப்போது அதனை செய்ய முடியாது. இந்தியா மிக உயர்ந்தது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.