Pawan Khera: காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைதான சில மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

By Pothy Raj  |  First Published Feb 23, 2023, 4:56 PM IST

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது செய்யப்பட்டார். ஆனால், சில மணிநேரத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியது. 


பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது செய்யப்பட்டார். ஆனால், சில மணிநேரத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியது. 

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு செல்லும் இன்டிகோ விமானத்தில் பவன் கெரா ஏறினார்.

Tap to resize

Latest Videos

அப்போது பவன் கெராவிடம், விமான ஊழியர்கள், தங்களை போலீஸ் அதிகாரி காண விரும்புகிறார்கள். விமானத்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, விமானத்தில்இருந்து இறங்கிய பவன் கெராவை டெல்லி போலீஸார் உதவியுடன் அசாம் போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது| விமானநிலையத்தில் டெல்லி போலீஸார் நடவடிக்கை

டெல்லி போலீஸார் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது “பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக அசாம் மாநிலம், ஹப்லாங் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பவன் கெராவை கைது செய்யக் கோரி அசாம் போலீஸார் உதவி கோரினர்.

அசாம் போலீஸார் கேட்டுக்கொண்டதன் பெயரில் டெல்லி போலீஸார் டெல்லி விமானநிலையத்தில் வைத்து பவன் கெராவை கைது செய்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். பவன் கெரா மீதான நடவடிக்கையை அசாம் போலீஸார் எடுப்பார்கள்” எனத் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக எடுக்கக் கோரி மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கோரினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எம்ஆர் ஷா, பிஎஸ் நரசிம்மா அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில் “ பிரதமர் மோடி குறித்து பேசிய அன்றே பவன் கெரா மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்திருப்பது தேவையற்றது. அவர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கும், போலீஸார் பதிவு செய்த வழக்குப்பிரிவுக்கும் தொடர்பில்லை. இந்த நேரடியாக பேச்சுரிமையை பாதிக்கும்” எனத் தெரிவித்தார்

இதே வேலையாபோச்சு! பெண் பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி: இது விமானத்தில் இல்லீங்க!

கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி வாதாடுகையில் “ அசாம் போலீஸார், பவன் கெரா பேசியது தொடர்பான ஆடியோ டேப்பை நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் ஒலிபரப்பத் தயாராக உள்ளனர். ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிராக அவமதிப்புக்குரிய வார்த்தைகளை பவன் கெரா பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்தார்

இதையடுத்து, வழக்கை வரும் 27ம் தேதிக்கு பட்டியலிடுவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், பவன் கெராவுக்கு வரும் 28ம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்குப்படும். இன்று மாலை உரிய மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெறஇந்த வழக்கில் உத்தரப்பிரேதசம், அசாமில் பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையை ஒன்றாக இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இந்த விவகாரத்தில் உ.பி., அசாம் அரசு பதில் மனுவைவரும் 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


 

click me!