sonia gandhi :சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை சுயநல அரசு சிறுமைப்படுத்துகிறது: சோனியா காந்தி கண்டனம்

By Pothy RajFirst Published Aug 15, 2022, 12:11 PM IST
Highlights

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எந்தவிலை கொடுத்தேனும் சுயநலம் கொண்ட அரசு சிறுமைப்படுத்துகிறது. அரசியல் லாபத்துக்காக செய்யும் இந்தச் செயலை காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எந்தவிலை கொடுத்தேனும் சுயநலம் கொண்ட அரசு சிறுமைப்படுத்துகிறது. அரசியல் லாபத்துக்காக செய்யும் இந்தச் செயலை காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும், கடந்த 1947ம் ஆண்டு நடந்த தேசப்பிரிவினை குறித்தும் பாஜக சார்பில் ஒருவீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

வெடித்தது சர்ச்சை.. கர்நாடக அரசு பத்திரிகை விளம்பரத்தில் சாவர்க்கர்.. நேரு போட்டோ புறக்கணிப்பு..!

அந்த வீடியோவில் இந்தியப் பிரிவினை நடந்தபோது இருந்த காங்கிரஸ் தலைமை, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரை குற்றம்சாட்டி இருந்தது. அது மட்டுமல்லாமல் கர்நாடக அரசு சுதந்திரதினம் குறித்த விளம்பரத்தில் ஜவஹர்லால் நேரு குறித்த புகைப்படத்தை மட்டும் பிரசுரிக்காமல் தவிர்த்தது. 

இந்த இரு சம்பவங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

நண்பர்களே, கடந்த 75 ஆண்டுகளில் ஏராளமான விஷயங்களை நாம் சாதித்திருக்கிறோம். ஆனால் இன்று, சுயநலம் கொண்ட அரசு நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மிகப்பெரிய தியாகத்தையும், தேசத்தின் புனிதத்தையும் எந்த விலை கொடுத்தேனும் சிறுமைப்படுத்துகிறது இதை ஒருபோதும் ஏற்க முடியாது. 

தாய்நாட்டின் சேவைக்காக இணைந்திருப்போம்: ராகுல் காந்தி சுதந்திரதின வாழ்த்து

வரலாற்று உண்மைகளை தவறாகச் சித்தரிப்பதையும், மிகப்பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய்படேல், அபுல் கலாம் ஆசாத் ஆகியோரைப் பற்றி அரசியல் லாபத்துக்காக பொய்யான தகவல்களை கூறுவதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

கடந்த 75 ஆண்டுகளில், அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சர்வதேச அரங்கில் இந்தியா தனது திறமையான குடிமக்களின் கடின உழைப்பால் அழியாத முத்திரையை பதித்துள்ளது.

விரைவில் 5ஜி மொபைல் சேவை : பிரதமர் மோடி உறுதி

தொலைநோக்குள்ள இந்த தலைவர்களின் கீழ், இந்தியா சுதந்திரமான, நியாயமான வெளிப்படையான தேர்தல்முறை ஆகியவற்றால் ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசன அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா முன்னணி நாடு என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளது. பன்முக மொழி, கலாச்சாரம், பிரிவுகளோடு எப்போதும் இந்தியா இருந்து வருகிறது

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்


 

click me!