புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திரதின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில், கடைகளில், வர்த்தக இடங்களிலும் தேசியக் கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்,மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த, பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசினார்.
அவர் பேசியதாவது
“ இந்தியாவில் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான காலம் இதுவாகும். இந்தியாவில் 5ஜி சேவை, செமிகன்டக்டர் உற்பத்தி, கிராமங்களில் கண்ணாடி இழைக் கேபிள் என கிராமங்களில்கூட டிஜிட்டல் இந்தியா மூலம் புரட்சியை நாம் கொண்டு வந்துள்ளோம்.
தாய்நாட்டின் சேவைக்காக இணைந்திருப்போம்: ராகுல் காந்தி சுதந்திரதின வாழ்த்து
செமிகன்டக்டர்ஸ், 5ஜி நெட்வொர்க், ஆப்டிகல் பைபர் ஆகியவை கல்வி, சுகாதார வசதிகள், சாமானிய மக்களின் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளில் வலிமையை ஏற்படுத்தியுள்ளது. அடிமட்டத்திலிருந்து தொழில்துறை வளர்ச்சியும் வரும்.
நம்முடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தெரோர வியாபாரிகள், அமைப்பு சார்ந்த துறையில் பணியாற்றுவோர் ஆகியோரை வலிமைப்படுத்த வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராகச் செயல்படுவது தீவிரப்படுத்தப்பட வேண்டும். முழுவீச்சுடன் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளாக ஆதார் பயன்பாட்டின் மூலம் நேரடியாக பயனாளிகளின் கணக்கிற்கே பணம் பரிவரத்தனையானது. ரூ.2 லட்சம் கோடி கறுப்புப்பணம் கண்டுபிடிக்க மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டன
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.