ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத் தலைவராக குலாம் நபி ஆசாத்தை தலைவர் சோனியா காந்தி நியமித்தார். ஆனால் சிலமணி நேரங்களில் அந்தப் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத் தலைவராக குலாம் நபி ஆசாத்தை தலைவர் சோனியா காந்தி நியமித்தார். ஆனால் சிலமணி நேரங்களில் அந்தப் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கியதில், குலாம்நபி ஆசாத் முக்கியமானவர். அப்போது இருந்து சோனியாவுக்கு எதிராக செயல்பட்ட நிலையில் முக்கியத்துவம் இல்லாத பதவியை வழங்கியதையடுத்து, உடனடியாக அதிலிருந்து விலகியுள்ளார் எனத் தெரிகிறது.
பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்
ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக விகார் ரசூல் வாணிநியமிக்கப்பட்டார். இவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர். இருப்பினும் அனுபவம் மிகுந்த ஆசாத்தை பிரசாரக் குழுத் தலைவராக மட்டுமே சோனியா நியமித்தது சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்.! ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு
மாநிலங்களவையில் இருந்து கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத் ஓய்வு பெற்றபின், காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் எம்.பி. பதவி காலியானபோதும்கூட குலாம் நபி ஆசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை மீது குலாம்நபி ஆசாத் அதிருப்தியுடன் இருந்து வந்தார்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நோக்கில் செயல் தலைவராக ராமன் பல்லாவும், துணைப் பிரச்சாரக் குழுத் தலைவராக பிடிபி கட்சியின் முன்னாள் தலைவர் ஹிமித் காராவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், தன்னை பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை விரும்பாத குலாம் நபிஆசாத், சோனியா காந்தி அறிவித்த சில மணிநேரத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்து, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தும் சூழல் இருக்கிறது. அதற்கான ஆயத்த வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்பாக தயாராக வேண்டும் என்ற நோக்கில் கட்சி சீரமைப்பில் சோனியா காந்தி ஈடுபட்டார். ஆனால், அவர் எதிர்பாராத வகையில் குலாம்நபியிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது.
பில்கிஸ் பானு வழக்கு: பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் வார்த்தையை நம்பலாமா: காங்கிரஸ் கேள்வி
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வாணி(வயது46), ராம்பன் மாவட்டம், பனிஹால் நகரைச் சேர்ந்தவர். ஓமர் அப்துல்லா,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருமுறை அமைச்சராக இருந்தவர் வாணி. பிரசாரக்குழுவின் துணைத் தலைவராக தாரிக் ஹமீது காராவும், ஒருங்கிணைப்பாளராக ஜிஎம் சரூரியும் நியமிக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, ஒத்துழைப்புக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, விளம்பரம் மற்றும் பிரசுரக் குழு, ஒழுங்கு நடவடிக்கை குழு, தேர்தல் நடவடிக்கை குழு ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று நியமித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.