இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் தந்தையின் உடலை மலையில் விட்டு சென்ற மகன்.. அதிர்ச்சி சம்பவம்

Published : May 03, 2023, 07:15 PM IST
இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் தந்தையின் உடலை மலையில் விட்டு சென்ற மகன்.. அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

தனது தந்தையின் இறுதி சடங்கை நடத்த பணம் இல்லாததால், தந்தையின் உடலை மலைப்பகுதியில் விட்டு சென்றுள்ளார்

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது நபர் தனது தந்தையின் இறுதி சடங்கை நடத்த பணம் இல்லாததால், தந்தையின் உடலை மலைப்பகுதியில் விட்டு சென்றுள்ளார். உயிரிழந்த நபர் பொம்ம ராஜசேகர் ரெட்டி என்பதும் அவர் சின்ன சிங்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

குவலச்சேர்வு கட் ரோடு பகுதியில் அவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குவலச்சேர்வு கட் ரோடு பகுதியில் கடந்த 29-ம் தேதி லாரி விபத்து நடந்ததாகவும்,  அப்போது அந்த லாரியின் ஓட்டுநர், கிளீனரும் இறந்த சடலத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகவும், முதலில் கொலை என்று சந்தேகித்ததாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

உயிரிழந்த நபருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதை தொடர்ந்து அவரே மருத்துவமனையில் சென்று சேர்ந்துள்ளார். அவரின் நிலை குறித்து அறிந்த அவரின் மகன் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆட்டோ மூலம் தனது வீட்டிற்கு செல்ல நினைத்துள்ளார். எனினும் வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜசேகரின் தந்தை உயிரிழந்துவிட்டார். எனினும் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்துவிட்டார். இதைதொடர்ந்து குவலச்சேர்வு கட் ரோடு அருகே, ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் தங்களை இறக்கிவிடும் படி ராஜசேகர் ஆட்டோ ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் தங்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிடும் படி கேட்டுள்ளார். அதனை ஏற்ற ஆட்டோ ஓட்டுநர், குவலச்சேர்வு கட் ரோட்டில் அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர் ராஜசேகர் தனது தந்தையின் உடலை மலையடிவாரத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்துவிட்டு வந்துள்ளார். தனது கிராமத்திற்கு திரும்பிய ராஜசேகர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தந்தை இறந்துவிட்டதாகவும், அவரின் இறுதிச்சடங்குகள் மருத்துவமனையில் நடைபெற்றதாகவும் கூறி உள்ளார். 

எனினும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிந்த உடன் ராஜசேகர் போலீசிடம் சரணடைந்துள்ளார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆதார் அட்டையில் இந்த விவரங்களை சரிபார்க்கலாம்.. புதிய வசதியை அறிமுகம் செய்த UIDAI

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!