உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அஜீத் மயூரா. இவர் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர். சமீபத்தில் பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் மீது 9 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
பண மோசடி, திருட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வந்த சோஷியல் மீடியா பிரபலம் மயூரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அஜீத் மயூரா. இவர் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர். சமீபத்தில் பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் மீது 9 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆரம்பகாலத்தில் மும்பையில் இருந்த மயூரா அங்கு சங்கீதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளது. வேலை பறிபோன மயூரா மும்பையில் போலி பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் தயாரித்தார். ஆனால், அதிலும் போதிய வருமானம் கிடைக்காததால் சொந்த ஊரான உத்தர பிரதேசக்கு சென்றுள்ளார். ஊருக்கு சென்றும் வேலை கிடைக்காததால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக திருட்டில் ஈடுபட தொடங்கினார்.
undefined
அதன் பிறகு போலி நிறுவனங்கள், கள்ளநோட்டு மாற்றுதல், திருட்டு என அனைத்து வகையான குற்றங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். இதனையடுத்து சசிகலா(30) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதனையடுத்து மயூரா தனது இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியே வீடுகள் வாங்கி கொடுத்து ஆடம்பரமாக வாழவைத்துள்ளார். அவரின் செல்போன் வாங்கி ஆய்வுசெய்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மயூராவுக்கு மேலும் 6 காதலிகள் இருப்பதும் அடிக்கடி இவர்களுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
இவர் சோஷியல் மீடியாவில் மயூரா வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் பெண்களைக் கவரும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். லக்னோவிலுள்ள ஹோட்டலில் அமர்ந்து தன் காதலியுடன் வெளிநாட்டில் புத்தாண்டைக் கொண்டாடத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மயூராவைக் கைது செய்ததாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அவருக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.