அன்று பட்டதாரி... இன்று 12-ம் வகுப்பு... ஸ்மிருதி இராணி வேட்புமனுவில் விநோதம்..!

By Asianet TamilFirst Published Apr 12, 2019, 9:58 AM IST
Highlights

கடந்த தேர்தலில் கல்வித் தகுதி பட்டதாரி என வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்தத் தேர்தலில் 12-ம் வகுப்பு என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். அப்போது அவர் வேட்புமனுவில் பட்டதாரி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் பட்டப்படிப்பு எதையும் படிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. 
இந்நிலையில் தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி களமிறங்கியுள்ளார். இந்தத் தொகுதியில் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போதைய வேட்புமனுவில் அவர் பட்டாதாரி எனக் குறிப்பிடவில்லை. தனது வேட்பு மனுவில் 1991-ல் மேல்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் குறிபிட்டுள்ளார். இதேபோல 1993-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.


1994-ல் டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரி எனக் குறிப்பிட்டிருந்த ஸ்மிருதி, தற்போது பட்டதாரி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை அவர் அமைச்சரான பிறகு அவருடைய கல்வித் தகுதி குறித்து சர்ச்சை எழுந்ததால், தற்போது உண்மை நிலையைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

click me!