மூடிய அறையில் தயாரான பாஜக அறிக்கை... சீறும் ராகுல்காந்தி...!

By vinoth kumarFirst Published Apr 9, 2019, 5:20 PM IST
Highlights

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு தனிநபரின் குரல் என்றும், ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டது எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு தனிநபரின் குரல் என்றும், ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டது எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டது. இதனையடுத்து மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி நேற்று டெல்லியில் வெளியிட்டது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்; பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு தனிநபரின் குரல் என்றும், ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து தயாரிக்கப் பட்டதாகவும், அவர்களின் தேர்தல் அறிக்கையில்  தொலைநோக்கு பார்வை இல்லை. குறுகிய நோக்கம் கொண்டதாகவும், அகங்காரம் கொண்டதாகவும் உள்ளது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று அறிக்கை ஆகும் என்று ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆனால் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, அனைவரிடம் கருத்து கேட்டப் பின்னர் தான் தயாரிக்கப்பட்டது. இது லட்சக்கணக்கான மக்களின் குரல் மற்றும் சக்தி அடங்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

click me!