முஸ்லிம் பெரியவரை நடுரோட்டில் முட்டி போட வைத்து வாயில் பன்றிக்கறி திணித்த கொடூரம்..!

Published : Apr 09, 2019, 03:33 PM IST
முஸ்லிம் பெரியவரை நடுரோட்டில் முட்டி போட வைத்து வாயில் பன்றிக்கறி திணித்த கொடூரம்..!

சுருக்கம்

அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளரான இஸ்லாமிய முதியவரை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளரான இஸ்லாமிய முதியவரை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அசாம் மாநிலம், பிஷ்வாந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68). இவர் அங்குள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியில் பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் மாட்டு இறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹோட்டலுக்குள் புகுந்த மர்ம கும்பல் திடீரென சவுகத் அலியை கடைக்குள் இருந்து வெளியில் இழுத்து வந்து, அடித்து உதைத்துள்ளனர்.

 
 
மாட்டிறைச்சி விற்பனை செய்ததைக் காரணம்காட்டி அடித்தது மட்டுமல்லாமல், சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக சவுக்கர் அலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மீண்டும் இது போல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இதுதொடர்பாக அவரது சகோதரர் கூறுகையில் நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறோம்.   மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்யக்கூடாது என நோட்டீஸ் கொடுத்திருந்தால், நாங்கள் அதை தவிர்த்திருப்போம், ஆனால், அவர்கள் எனது சகோதரரை தாக்கி உள்ளது வேதனை அளிக்கிறது என்றார். காயமடைந்த சவுகத் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!