நூலிழையில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி பெறும்... இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..!

By Asianet TamilFirst Published Apr 9, 2019, 6:10 AM IST
Highlights

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நூலிழையில் மெஜாரிட்டி பெறும் என்று இறுதிக் கட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் வி.எம்.ஆர். நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியது.  மார்ச் 22  முதல் ஏப்ரல் 4 வரை நாட்டின் 960 இடங்களில் சுமார் 14, 300 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 149 இடங்களையும் பிற கட்சிஅள் 115 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும் இடதுசாரி முன்னணி 2 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 20 இடங்களையும் தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி 14 இடங்களையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக 16 இடங்களையும் காங்கிரஸ் - மஜத கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் பாஜக 50 இடங்களில் வெல்லும் என இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு 27 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்பில் மாறுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியிட இன்றே கட்சி நாள் என்பதால், இனி மக்களவைத் தேர்தல் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் யாரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட முடியாது.

click me!