சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை! ம.பி. பாஜக தலைவரின் மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு!

By SG Balan  |  First Published Jul 16, 2023, 8:40 PM IST

இந்த பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாவும், அந்தப் பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் பாஜக தலைவரின் மகன் உள்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

சென்னை மணலி விரைவு சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தாதியா மாவட்ட பாஜக தலைவர், கூட்டு பலாத்கார வழக்கில் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் கட்சி நிர்வாகியின் மகன் பெயர் இடம்பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நல்வாய்ப்பாக அந்தப் பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உன்னாவ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் என்றும் மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டாடியா காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா தெரிவிக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தன்னையும் தன் அக்காவையும் நான்கு பேர் கடத்திச் சென்றனர் எனவும் ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் புகார் கூறியுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியும் அவரது மூத்த சகோதரியும் வீடு திரும்பியதை அடுத்த, சிறுமியின் சகோதரி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதீப் சர்மா சொல்கிறார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை பற்றி பதிவிட்ட 8 பேர் நேரில் ஆஜராக சம்மன்!

click me!