இருமுடி கட்டி வந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசித்த பாடகி!

 
Published : Jan 15, 2018, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
இருமுடி கட்டி வந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசித்த பாடகி!

சுருக்கம்

Singer Chitra came to Sabarimala

பிரபல பாடகி சித்ரா, நேற்று சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார்.

சபரிமலை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி அன்று நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நாள்தோறும் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். 

நேற்று மகர ஜோதியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டிருந்தனர். பொன்னம்பல மேட்டில் 3 முறை தெரிந்த மகர ஜோதியை சரண கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ரா, நேற்று முதல் முறையாக ஐயப்பனை தரிசனம் செய்தார். இருமுடி கட்டி, ஐயப்பன் கோயிலுக்கு பாடகி சித்ரா வந்தபோது, அவரை, தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். 

பாடகி சித்ராவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்புதான், தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடிகர் ஜெயராமும் இருமுடி கட்டி நேற்று ஐயப்பனை தரிசனம் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்